சூடானில் நிகழ்ந்த காலரா தொற்றுநோய்:299 பேர் உயிரிழப்பு
2024-03-04 09:39:17

மார்ச் 3ஆம் நாள் சூடானில் நிகழ்ந்த காலரா தொற்றுநோய் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2023ஆம் ஆண்டின் செப்டம்பர் முதல் சூடானில் காலரா தொற்றுநோய் பரவல் பெருமளவில் நிகழ்ந்த பிறகு, நாட்டில் 10 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 299 பேர் உயிரிழந்தனர் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.

உலக சுகாதார அமைப்பு சூடான் சுகாதார அமைச்சகத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றது. இவ்வமைப்பு, சூடானில் பெருமளவில் காலரா தடுப்பூசி போடும் நடவடிக்கையை மேற்கொண்டு, மருத்துவ பணியாளர்களுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. சூடானில் நான்கு மாநிலங்களில் 280 மருத்துவ பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.