சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத்தொடர் 4ஆம் நாள் துவக்கம்
2024-03-04 09:24:01

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் மாலை 3மணியளவில் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கவுள்ளது.

துவக்க விழாவில் பங்கேற்கும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டி உறுப்பினர்கள் இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலைப் பற்றி பரிசீலனை செய்வர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் நிரந்தரக் குழு வழங்கும் பணியறிக்கையையும்  சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடருக்குப் பிந்தைய ஆலோசனைப் பணி பற்றிய நிலைமையையும் கேட்டறியவுள்ளனர்.