மேலதிக வெளிநாட்டு நண்பர்கள் சீனாவில் பயணிக்க வரவேற்பு
2024-03-04 20:16:32

சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா இரத்து கொள்கை தொடர்ந்து விரிவாக்குவதோடு, சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலதிக வெளிநாட்டு நண்பர்கள் சீனாவுக்கு வருவதற்கு சீனா, வரவேற்பு தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான சுற்றுலா சூழ்நிலையை வழங்க அரசு தொடர்ந்து பாடுபடும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 4ஆம் நாள் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், வசந்த விழாக்காலத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை, 32 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியது. பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டவர்களுக்கு விசா ரத்துக் கொள்கையால், அந்நாடுகளில் இருந்து சீனாவுக்கு வருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.