சீனாவில் புதிய வாய்ப்புகள் நிறைந்துள்ளன
2024-03-05 20:51:51

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இவ்வாண்டில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. செவ்வாய்கிழமை காலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய மக்கள் பேரையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அரசுப் பணியறிக்கையை வழங்கியபோது இதைத் தெரிவித்தார். இந்த இலக்கைச் செயல்படுத்துவதைப் பொறுத்து, அரசு நடப்பாண்டின் முக்கியமான பத்து பணிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. நவீன தொழில்துறை அமைப்பின் கட்டுமானத்தை தீவிரமாக ஊக்குவித்தல், அறிவியல் மற்றும் கல்வி மூலம் நாட்டை வளர்ப்பதற்கான நெடுநோக்கு திட்டத்தை ஆழமாக செயல்படுத்துதல் முதலியவை இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த அரசுப் பணியறிக்கையில் குறிப்பிட்ட புதிய தர உற்பத்தி திறன்கள் எனும் சொல், சூடான அம்சமாக மாறியுள்ளது. மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்ட இப்பகுதி, பொருளாதார வளர்ச்சிக்கு ஊந்துசக்தியாக மாறும் என்றும், சீனா புத்தாக்கத்தின் வளர்ச்சிக்கு முறைமையில் அதிக கவனம் செலுத்துவதை இது பொருட்படுகிறது என்றும் பல வெளிநாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

தவிரவும், புதிதாக வளர்ந்து வரும் தொழில் மற்றும் எதிர்காலத் தொழில், டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான புத்தாக்க வளர்ச்சி ஆகியவற்றுக்கான செயல்பாட்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசுப் பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டது. புதிய எரியாற்றல், டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, உயர்தர உற்பத்தி, மருத்துவச் சிகிச்சை மற்றும் உடல் நலம் போன்ற தொழில்கள், தற்போது சீனாவில் சில வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முக்கியப் பகுதிகளாக உள்ளது என்று சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.