வளர்ச்சி அடைய வேண்டும்... வளர்ச்சியை புரிய வேண்டும்.
2024-03-06 11:04:50

கடந்த சில நாட்களில், இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில், சீனப் பொருளாதாரம் உச்சத்தை அடைவது போன்ற ஒலியும் கலந்துள்ளது. சீனப் பொருளாதாரம் பற்றி விவாதங்களுக்கு பதில் கிடைக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமானால், , சீனாவின் வளர்ச்சியை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள பிறகு, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையே ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) ரீதியான இடைவெளி என்பது எப்போதும் விவாதிக்கப்பட்டு வரும் முக்கிய கருப்பொருள் ஆகும். 2023ஆம் ஆண்டு, இடைவெளி குறிப்பிட்ட அளவில் விரிவாகியுள்ளது. மேலும், உயர் அறிவியல் தொழில்நுட்ப துறையில் சீனா மீது அமெரிக்கா தடை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சீனப் பொருளாதார வளர்ச்சி குறையுமா இல்லையா என்ற சந்தேகம் சில மக்களிடையே எழுந்துள்ளது.

இது உண்மையா? முதலில், ஜி.டி.பி. என்ற எண்ணிக்கையை உரிய முறையில் பார்க்க வேண்டும். ஜி.டி.பி. கணக்கிடும்போது, பொருட்களின் விலைவாசி, நாணயங்களிடையே மாற்று விகிதம் உள்ளிட்ட காரணிகளுடன் தொடர்புடையது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு நாட்டு தனது நாணயம் மூலம் ஜி.டி.பி.யை கணக்கிடுவது வழக்கம். இதில், விலைவாசி உள்ளிட்ட பணவீக்கம் சேர்க்கப்பட்டு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, 2022ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சி.பி.ஐ. மற்றும் பி.பி.ஐ. குறியீடுகள் முறையே 8 மற்றும் 16.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதேவேளையில், சீனாவின் சி.பி.ஐ. மற்றும் பி.பி.ஐ. முறையே 2 மற்றும் 4.1 விழுக்காடு மட்டும் உயர்ந்துள்ளது.

விலைவாசியை தவிரவும், மாற்று விதிகமும் சேர்க்கப்பட்டு கணிக்கப்பட வேண்டும். சீனா மற்றும் அமெரிக்க பொருளாதார மதிப்பை ஒப்பிடும் போது,  ரென்மின்பி நாணயத்தை அமெரிக்க டாலருக்கு மாற்றுவதன் மூலம் சீனாவின்  ஜி.டி.பி.யை கணக்கிட வேண்டும். 2022ஆம் ஆண்டு மார்ச்சில், அமெரிக்க டாலருக்கு நிகரான சீன ரென்மின்பி மதிப்பு 6.3ஆக இருந்தது. ஆனால், தற்போது, இந்த மிதப்பு 7.1ஆக உயர்ந்துள்ளது. எனவே, விலைவாசி மற்றும் மாற்று விகிதம் ஆகிய இரண்டு காரணிகளைப் பார்த்தால்,  இரு நாடுகளின் பொருளாதார மதிப்புகளிடையே இடைவெளி விரிவாகியுள்ளது.

தரவுகள் அல்லது வளர்ச்சிக் கட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சீனப் பொருளாதாரம் உச்சம் அடைவது என்ற கருத்தே, சீனப் பொருளாதார சரிவு என்பதன் புதிய வடிவிலான கூற்று ஆகும் என்று சந்தேகிக்கப்படுகிறது.