சீனாவின் வளர்ச்சியை தவறாக மதிப்பீடு செய்பவர்கள் வாய்ப்பை இழந்து விடுபவர்:வாங் யீ
2024-03-07 13:56:17

கடந்த  ஆண்டு சீனப் பொருளாதாரம் 5.2 விழுக்காட்டு வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின் வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு சுமார் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. சீனாவின் உந்து சக்தி இன்னும் வலுவாக இருக்கிறது. அடுத்த வளர்ச்சி வாய்ப்பு இன்னும் சீனாவில் உள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 7ஆம் நாள் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

முதலில், சீனாவின் வளர்ச்சியில் எண்ணிக்கை ரீதியான அதிகரிப்பு மற்றும் தரம் ரீதியான மேம்பாடு ஆகியவை காணப்படுகிறது. புதிய தொழில்கள் வளமாக வளர்ந்து வருகின்றன. 2ஆவதாக,  140 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய சந்தை  உலகிற்கு திறக்கிறது.  3ஆவதாக, சீனாவின் திறப்பு நிலை மேலும் விரிவாகி வருகிறது. சீனாவின் சுங்க வரி குறைந்து வருவதுடன், உலக வர்த்தக அமைப்பைச் சேர்ந்த வளர்ந்த நாடுகளின் நிலைக்கு சமமாகும். சீனாவின் வளர்ச்சி, உலகைச் சார்ந்திருப்பது போல உலகின் வளர்ச்சி சீனாவைச் சார்ந்திருக்கிறது. சீனாவின் வளர்ச்சியை தவறாக மதிப்பீடு செய்பவர்கள் , வாய்ப்பை இழந்து விடுபவர் என்று வாங் யீ குறிப்பிட்டார்.