© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
உலகளாவிய அன்னிய முதலீடு 2023ஆம் ஆண்டில் 18விழுக்காடு குறைந்தது. இதை எதிர்கொண்டு, பல்வேறு நாடுகள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், சீனா என்ன செய்கிறது என்பது பற்றி இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், அன்னிய முதலீட்டுக்கு ஊக்களிக்கும் தொழில்களின் பட்டியலை விரிவுப்படுத்துவது, அன்னிய முதலீட்டுக்கு சேவை சார் உத்தரவாதத்தை அதிகரிப்பது, வேலை, கல்வி மற்றும் சுற்றுலா செய்ய சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் வசதி வழங்குவது முதலியவை நடைமுறைக்கு வரும் என்று அரசுப்பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அன்னிய வணிகர்கள் பரிமாற்றத்தை வசதிப்படுத்துவதோடு, அவர்கள் முதலீடு மூலமாக தொழிலை நடத்துவதற்கு முக்கிய உத்தரவாதம் அளிக்கும்.
இரண்டாவதாக, அன்னிய முதலீட்டுக்கான எதிர்மறைப் பட்டியலில் உள்ள பொருட்களைக் குறைப்பது, உற்பத்தி தொழிலில் அன்னிய முதலீடு செய்ய விதித்த தடைகள் அனைத்தையும் நீக்குவது, தகவல் தொலைதொடர்பு, மருத்துவச் சிகிச்சை போன்ற சேவை சார் துறைகளில் நுழைவு அனுமதிக்கான கட்டுபாட்டைக் குறைப்பது முதலிய நடவடிக்கைகள் அரசுப்பணியறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தவிர, தேசிய சலுகை அணுகுமுறையை அனுபவிப்பது, சட்டப்படி அரசு கொள்வனவில் சமத்துவ முறையில் பங்கெடுப்பது உள்ளிட்ட அன்னிய முதலீட்டுடன் தொடர்புடைய கொள்கைகளை தொடர்ந்து நன்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அரசுப்பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இதனிடையில், அண்மையில் அமெரிக்கா, ஜப்பான் முதலியவற்றைச் சேர்ந்த வெளிநாட்டு வணிக சங்கங்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கைகளில், முதலீட்டு இலக்கைப் பொறுத்து, சீனாவில் முதலீடு செய்து வரும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், சீனாவை உலகளவில் முதல் இடத்தில் அல்லது முதல் மூன்று இடங்களில் வைத்திருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.