ஆப்பிரிக்கா, சுயவிருப்பத்துடன் சீனாவுடனான ஒத்துழைப்பு உறவை உருவாக்கியது: ஆப்பிரிக்க அரசுத் தலைவர்
2024-03-10 19:06:25

கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலுடன், சீன-சியரா லியோன் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை தொடர்ச்சியாக வலுவடைந்து, பயன்தரும் ஒத்துழைப்புகள் நிதானமாக முன்னேறி, சர்வதேச கூட்டுச் செயல்பாடுகள் மேலும் நெருக்கமாக உள்ளது. இரு நாட்டுறவுக்கு இது புதிய இயக்காற்றலை ஊட்டி வருகிறது.

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் புதிய கூட்டம் இவ்வாண்டு நடைபெறவுள்ளது. இது குறித்து, சியரா லியோன் அரசுத் தலைவர் ஜூலியஸ் மாடா பியோ சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஆப்பிரிக்கா, சுயவிருப்பத்துடன் சீனாவுடன் கூட்டு வெற்றியுடைய உறவை உருவாக்கியது. சீனாவுடன் பல ஆண்டுகளாக ஒத்துழைப்பு மேற்கொண்டதன் மூலம், நாம் எங்களை மேலும் ஆழமாக அறிந்து கொண்டோம். ஆப்பிரிக்க-சீன உறவு, உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளுடன் கூட்டாக முன்னேறி, ஆப்பிரிக்க மக்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவது ஆப்பிரிக்க நாடுகளின் பொது விருப்பமாகும். ஆப்பிரிக்க நாடுகளை, சமத்துவக் கூட்டாளியாக சீனா கருதுகிறது. இது உண்மையான நட்புறவாகும் என்றார்.