சீன-லாவோஸ் இருப்புப்பாதை மூலம் 3 கோடி பயணிகள் பயணித்தனர்
2024-03-14 17:39:17

இவ்வாண்டின் மார்ச் 12ஆம் நாள் வரை, சீன-லாவோஸ் இருப்புப்பாதை மூலம் மொத்தம் 3 கோடியே 2 லட்சம் பயணிகள் பயணித்தனர். 3 கோடியே 42 லட்சத்து 40 ஆயிரம் டன் சரக்குகள் அனுப்பப்பட்டன. இதில் எல்லை கடந்த சரக்குகள், 78 லட்சம் டன்னைத் தாண்டியது. சர்வதேச தங்க பாதையாக, சீன-லாவோஸ் இருப்புப்பாதையின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என்று சீன ரயில்வே நிறுவனம் 14ஆம் நாள் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் முதல், சீன-லாவோஸ் இருப்புப்பாதையின் குன்மிங்-வியன்தியான் பகுதியில் இயங்கும் சர்வதேச பயணிகள் தொடர் வண்டிகளில் 87 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 55 ஆயிரம் பயணிகள் பயணித்தனர். இவ்விரு இடங்களுக்கிடையேயான பயண நேரம், ஒரு நாளுக்குள் உள்ளது.

சீன-லாவோஸ் இருப்புப்பாதை மூலம் அனுப்பப்பட்ட சரக்கு வகைகள், துவக்கத்தில் உள்ள ரப்பர், ரசாயன உரம், பல்பொருட்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேலான வகைகளிலிருந்து, மின்னணு பொருட்கள், ஒளிவோல்ட்டா மின்கலப் பொருட்கள், தகவல் தொடர்பு, வாகனம் உள்ளிட்ட 2900 வகைகள் வரை அதிகரித்துள்ளன. லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், மியன்மார் உள்ளிட்ட ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானத்தில் பங்கெடுக்கும் 12 நாடுகள் மற்றும் சீனாவின் முக்கிய நகரங்களில் சரக்குகள் அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.