காங்கோ குடியரசு அரசுத் தலைவருக்கான சிறப்புப் பேட்டி
2024-03-16 20:40:24

சீனாவுக்கும் காங்கோ குடியரசுக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கோ குடியரசின் அரசுதல் தலைவர் சாசூ அந்நாட்டு தலைநகர் பிரஸ்ஸாவில்லியில் சீனாவின் சி.ஜி.டி.என்.க்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், கடந்த 60ஆண்டுகளில் 16முறை சீனாவில் பயணம் மேற்கொண்ட அவர், சீனாவில் நடந்த தலைகீழ் மாற்றத்தை நேரில் கண்டுள்ளதோடு, நாடு பெற்றுள்ள வளர்ச்சியினால் சீனாவின் மீதான மரியாதை கூடியுள்ளது என்று தெரிவித்தார். பிரஸ்ஸாவில்லி கேபிள் தாங்கும் பாலம், 1 எண் தேசிய நிலை நெடுஞ்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் இரு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொண்டதால், அந்நாட்டின் வாழ்வாதாரத்துக்கு பலன்கள் கொண்டு வந்துள்ளன என்றும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவினால், ஆப்பிரிக்காவுக்கு உண்மையான வளர்ச்சி வாய்ப்பு தந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தவிர, மேலை நாட்டின் அரசியல்வாதிகள் பரப்புகின்ற புதிய காலனி ஆட்சி என்னும் கூற்றை சாசு மறுத்தார். இந்த பேட்டியை மேலும் பார்க்க இங்கே அழுத்தவும்