© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனச் சந்தை ஈடிணையற்ற சந்தையாக விளங்குகிறது. சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியின் முன்னேற்றப் போக்கு மீது பல வெளிநாட்டு நிறுவனங்கள் அண்மையில் பேரார்வம் காட்டியுள்ளன.
சீனா புதிதாக வெளியிட்ட ஜனவரி முதல் பிப்ரவரி வரையான தேசிய பொருளாதார இயக்க நிலைமையின்படி, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழிற்துறை அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7 விழுக்காடு அதிகம். நிலையான சொத்துகளிலான முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.2 விழுக்காடு அதிகம். தொடர்புடைய தரவுகளின்படி, சீனப் பொருளாதாரம் நீண்டகாலமாகவும் சீராகவும் வளர்ந்து வரும் அடிப்படை நிலைமை மாறப்போவதில்லை.
பொருளாதாரத்தின் அதிகரிப்பு, புத்தாக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. இவ்வாண்டின் முதல் 2 திங்கள்காலத்திலுள்ள தொடர்புடைய தரவுகளின்படி, உயர் தொழில் நுட்பத் தொழில் துறை மீதான முதலீட்டுத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.4 விழுக்காடு அதிகம். பழைய தொழில் நுட்பம், எரியாற்றல் முதலியவற்றுக்கு பதிலாக புதிய தொழில் நுட்பம், புதிய எரியாற்றல், பொருளாதாரத்திற்கு உந்து ஆற்றலைக் கொண்டு வரும்.
புதிய உயர் தர உற்பத்தி திறன், சீனப் பொருளாதாரத்திற்கு முக்கியமாகும். இவ்வாண்டு சீன அரசு வெளியிட்ட பணியறிக்கையின்படி, நவீனமயமான தொழில் துறை அமைப்பின் கட்டுமானத்தை பெரிதும் விரைவுபடுத்தி, புதிய உயர் தர உற்பத்தி திறனை ஊக்குவிப்பது என்பது இவ்வாண்டின் முதல் கடமையாகும். சீனப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் காரணிகள் மென்மேலும் அதிகரித்து வருகிறது. இவ்வாண்டின் தொடர்புடைய கடமையை சீனப் பொருளாதாரம் சீராக நிறைவேற்றி, உலகப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.