சீன-ஆஸ்திரேலிய உறவின் மீட்சிக்கு உதவி புரியும் வாங்யீயின் பயணம்
2024-03-22 10:06:14

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மார்ச் திங்களில், ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் இப்பயணம் சீன-ஆஸ்திரேலிய உறவின் மீட்சிக்குத் துணை புரியும் என்று கருதப்படுகிறது.

இவ்வாண்டு சீன-ஆஸ்திரேலிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 10 ஆண்டுகாலத்தில், இரு தரப்புறவு ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது. சீனா மீது ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரசு மேற்கொண்ட தவறான கொள்கைகள் இதன் காரணமாகும்.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு மே திங்களில், ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி ஆஸ்திரேலியாவில் ஆட்சி அமைத்து, சீனா மீதான கொள்கையைச் சரிப்படுத்தியது.  அதனையடுத்து இரு தரப்புறவில் புதிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதனிடையில், 2022ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட போது, ஆஸ்திரேலியாவின் தலைமையமைச்சர் அல்பேன்ஸைச் சந்தித்துரையாடினார். அப்போது, இரு நாட்டுறவை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒத்த அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். 2023ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில், அல்பேன்ஸ் சீனாவில் பயணம் மேற்கொண்டார். 7 ஆண்டுகாலத்திற்குப் பிறகு, அந்நாட்டின் தலைமையமைச்சர் சீனாவில் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.

வாங்யீயின் பயணத்தின் போது, இரு தரப்பினரும் பல முறை கலந்துரையாடல் நடத்தினர் என்று அந்நாட்டின் செய்திஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சீனாவுடன் இணைந்து கூட்டு வெற்றி பெறுவதை ஆஸ்திரேலியா வளர்க்க வேண்டுமானால், அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவைக் கட்டுப்படுத்தும் நெடுநோக்குத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், இரு தரப்புறவை மேலும் உயர் நிலைக்குத் தூண்டலாம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.