© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் இரு கூட்டத்தொடருக்குப் பிறகு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவராக, அங்கோலா அரசுத் தலைவர் லோரென்சோ திகழ்ந்தார். இப்பயணத்தின்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-அங்கோலா உறவு, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்ந்துள்ளதாக இரு நாட்டு அரசுத் தலைவர்கள் அறிவித்தனர்.
சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் லோரென்சோ கூறுகையில், தொடரவல்ல வளர்ச்சியுடன், சீனா உலகத்துக்கு ஆச்சரியங்களை வழங்கி வருகிறது. அங்கோலா-சீன உறவு ஆண்டுதோறும் முக்கியமான வளர்ச்சி சாதனைகளைப் பெற்று வருகிறது. சீனா, அங்கோலாவுக்கு அடிப்படைக் கட்டுமானத்துக்கான நிதியுதவி வழங்கியது. அங்கோலா மட்டுமல்ல, உலகளவில் அதிகமான நாடுகளுக்கு சீனா உதவியளித்துள்ளது என்றார்.
மேலும், இரு நாடுகளும் ஒரே இலக்கை நோக்கி முன்னேறினால், மேலும் பெரும் ஆற்றல் மற்றும் மனவுறுதியைப் பெற்று, கூட்டு வெற்றியை நனவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.