பிலிப்பைன்ஸின் சட்டவிரோத செயலின் உண்மையான நோக்கம்
2024-03-28 10:16:04

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இரு கப்பல்களும் இரு கடற் காவற்துறையின் கப்பல்களும், இரண்டாவது ரென் ஜ கடற்பாறைக்கு அருகே கடலில் அங்கீகரிக்கப்படாத பகுதியில் நுழைந்து, இப்பகுதியில் சிக்கிக்கொண்ட போர்க்கப்பலுக்குக் கட்டிடப் பொருட்கள் மற்றும் பிற தேவையான பொருட்களை அனுப்பியுள்ளன. சீனக் கடல் காவற்துறை சட்டத்தின் படி இதைத் தடுத்துள்ளது. 18 நாட்களுக்குப் பிறகு, தனது உறுதிப்பாட்டை பிலிப்பைன்ஸ் மீண்டும் மீறியது. ரென் ஜ கடற்பாறைக்கு அருகிலுள்ள பகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க ஒரு கப்பல் மற்றும் இரு கடற் காவற்துறையின் கப்பல்களைப் பிலிப்பைன்ஸ் அனுப்பியது.

சீனக் கடல் காவற்துறை மீண்டும் சட்டத்தின் படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து, பிலிப்பைன்ஸின் மீறல் மற்றும் ஆத்திரமூட்டும் சதித்திட்டத்தை அகற்றியுள்ளது.

அண்மையில் தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் பலமுறை ஆத்திரமூட்டல் செயல்களை நடத்தியது. இதற்குப் பின்னால் மூன்று காரணங்கள் மறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

முதலாவது, மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் சீனாவின் சர்வதேசப் புகழைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றது. இதனால் தென் சீனக் கடலுக்கு எதிரான பிலிப்பைன்ஸின் சட்டவிரோத கூற்றுக்களைச் செயல்படுத்துகின்றது.

இரண்டாவது, தென் சீனக் கடல் விவகாரம், அமெரிக்காவிற்கு இப்பிராந்திய விவகாரங்களில் தலையிடும் சாக்குபோக்கை வழங்குகின்றது.

மூன்றாவது, தற்போதைய பிலிப்பைன்ஸின் செயல்கள், ஏப்ரலில் வாஷிங்டனில் நடைபெறவுள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் உச்சி மாநாட்டில் விவாதிக்கும் தென் சீனக் கடல் பிரச்சினைக்கு கூடுதல் "செய்திகளை" வழங்குகின்றன.