ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவு
2024-03-29 10:43:27

மார்ச் 27ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் தொழில் மற்றும் வணிகம், நெடுநோக்கு மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த பிரநிதிதிகளைச் சந்தித்துரையாடினார். இந்தச் சந்திப்பு உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன-அமெரிக்க உறவு நிலையாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்பது சான் பிரான்சிஸ்கோ சந்திப்பின் மிகப் பெரிய ஒத்த கருத்தாகும் என்பதை ஷிச்சின்பிங் அப்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது, சுமார் 70ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து தொழில் புரிந்து வருகின்றன.  அவற்றின் வருடாந்திர லாபம் 5000கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியதோடு, சீனப் பொருளாதாரத்துக்கும் உயிராற்றலைக் கொண்டு வந்துள்ளது. மேலும் சீன-அமெரிக்க வர்த்தகம் மூலம், அமெரிக்க உள்நாட்டில் 26லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதனைக் கருத்தில் கொள்ளும் பொழுது, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவின் சாராம்சமாகத் திகழ்வதைப் புரிந்து கொள்ள முடியும்.

உண்மையில், நடப்புச் சந்திப்பில் பங்கேற்ற அமெரிக்க தொழில் மற்றும் வணிகத் துறையின் பிரதிநிதிகள் பலர் சீனாவில் தொழில் புரிவதன் மூலம், சீனாவின் வளர்ச்சிக்கும் பங்காற்றியுள்ளதோடு, தங்கள் வளர்ச்சியை நனவாக்கியுள்ளனர்.  

இவ்வாண்டு, சீன-அமெரிக்க தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். ஷிச்சின்பிங் குறிப்பிட்டதைப் போல, இரு நாட்டுறவு முந்தைய நிலைக்குத் திரும்ப முடியாது. ஆனால், இருநாடுகளுக்கிடையே அருமையானதொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும்.