அமெரிக்க நிதித் துறை அமைச்சரின் கூற்று இணையத்தில் குற்றுஞ்சாட்டப்பட்டது
2024-03-30 20:08:06

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள பி.வி.மின்கல உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க நிதித் துறை அமைச்சர் ஜெனிட் யேலன், சீனாவின் புதிய ஆற்றல் தொழிற்துறையில் உற்பத்தி திறன் அளவுக்கு மீறும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், உலகளாவிய விலை மற்றும் உற்பத்தி முறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டதோடு, அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கும் தீங்கு விளைவித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்தக் கூற்று காரணமாக, ஜெனிட் யேலன் அமெரிக்க இணையவாசிகளால் கேலி செய்யப்பட்டார். ஆரம்பக் கட்டத்திலேயே, பசுமை ஆற்றல் துறையில் சீனாவின் முயற்சிகள் குறைவு என்று குறிப்பிட்ட ஜெனிட் யேலன், தற்போது சீனா அளவுக்கு மீறி செயல்படுத்துகின்றது என குற்றஞ்சாட்டினார் என்றும், போட்டியில் தனக்கு நன்மைகள் கிடைக்கும் போது, அமெரிக்கா தாராளச் சந்தை பற்றி பேசுகிறது, இல்லாத போது, பாதுகாப்புவாதம் பேசுகிறது. இது தான் அமெரிக்க விதி என்றும் இணையவாசிகள் விமர்சித்தனர். அவர்களின் கருத்துக்கள், சில அமெரிக்க அரசியல்வாதிகளின் போலித்தனமான தன்மை மற்றும் இரட்டை வரையறையைக் குறிக்கிறன.

சீனாவின் புதிய ஆற்றல் தயாரிப்புகள் போட்டி நன்மைகள் கொண்டதற்கான காரணம், அறிவியல் தொழில் நுட்ப வலிமை, உயர் தரம், முழுமையான தொழிற்துறை சங்கிலி ஆகியவை. போட்டியிடும் திறன் குறைவாக இருக்கும்போது, பிறர் மீது அவதூறு கூறும் செயல், வெட்கக்கேடானது.

தவிர, பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், சீனாவுடனான வர்த்தகப் போட்டி உறவு என்பது, 2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பொது தேர்தலின்போது, தீர்மானமற்ற வாக்காளர்களைக் கொண்ட முக்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்ஜியா, சமீபமாக புதிய ஆற்றல் வாகனத் தயாரிப்பு முதலியவற்றை பெரிதும் வளர்த்து வருகின்றது. இந்நிலைமையில், சீனா மீது கடுமையான அணுகுமுறையைக் காட்டவும், கட்சிக்கு கூடுதல் வாக்குகளைப் பெறவும், யேலன் இவ்வாறு கூறினார் என்று கருத்து தெரிவித்தது.