லுவோ யாங் நகரில் பியோனி மலர் பண்பாட்டு விழா துவக்கம்
2024-04-03 14:44:37

41வது லுவோ யாங் பியோனி மலர் பண்பாட்டு விழா ஏப்ரல் முதல் நாள் சீனாவின் லுவோ யாங் நகரில் துவங்கியது. இவ்விழாவின் தாக்கத்தை விரிவாக்கும் விதம், துவக்க விழா காணொளி மற்றும் நேரலை மூலம் நடத்தப்பட்டது. 

விழாவின் போது, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் லுவோ யாங் நகரின் செல்வாக்கு பெரிதும் உயர்ந்து வருகிறது. பியோனி மலர்களைக் கண்டுரசிக்கும் நிகழ்ச்சி மே 5ம் நாள் வரை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டது.