சீன ஊடகக் குழுமத்துக்கு டொமினிகா தலைமையமைச்சர் அளித்த பேட்டி
2024-04-06 17:16:27

டொமினிகாவின் தலைமையமைச்சர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் மார்ச் 23 முதல் 29ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், சீனா, டொமினிகாவின் உண்மையான நண்பராகும். இரு நாட்டுறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த பல முன்மொழிவுகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, டொமினிகா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சீனாவின் சிந்தனைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு டொமினிகா ஆதரவு அளித்து, சீனாவுடன் இணைந்து பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறது என்றார்.

மேலும், சீனா அற்புதமான வளர்ச்சியடைந்துள்ளது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் சீன அரசு முன்வைத்த சீன நவீனமயமாக்கம், சீன மக்களின் வரவேற்பு மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளது. சீன நவீனமயமாக்கத்தின் நனவாக்கம், சீனா மட்டுமல்ல, டொமினிகா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நன்மை புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.