© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ரோக்ஸி டங்க்வெர்ட்ஸ், ஜிம்பாப்வே நாட்டின் வனவிலங்கு மீட்புத் தளத்தின் பொறுப்பாளர் ஆவார். 2015ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜிம்பாப்வேவில் பயணம் மேற்கொண்டதைப் பற்றி அவர் கூறுகையில், அரசு தலைவர் ஷிச்சன்பிங்கின் வருமையை அறிந்த போது, நாங்கள் மிகவும் உற்சாகம் அடைந்தோம். அவருடன் எப்படிப் பேச வேண்டும் என்பது தொடர்பாக எனக்கு நிறைய யோசனைகள் இருந்தன என்றார்.
ரோக்ஸி மேலும் கூறுகையில், விலங்கு பாதுகாப்புப் பணிகள் குறித்து ஷிச்சின்பிங் அதிக அக்கறை கொண்டுள்ளார். இதனால், விலங்கு பாதுகாப்பு தொடர்பான அறைகூவல்கள் மற்றும் அவை சார்ந்த விவரங்களை அவர் அறிந்து கொண்டுள்ளார் என்றார்.
விலங்கு தொடர்பான பல கேள்விகளைக் கேட்ட ஷிச்சின்பிங், விலங்கு பாதுகாப்பில் ஜிம்பாப்வேக்கு எவ்வாறு உதவுவது என்றும் கேட்டார்.
ஷிச்சின்பிங் எனக்கு பாண்டா கரடிகள் வடிவம் கொண்ட அழகிய பூச்சாடி ஒன்றையும் அன்பளிப்பாக கொடுத்தார் என்று ரோக்ஸி டங்க்வெர்ட்ஸ் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பாண்டா கரடிகள் மீது நான் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். சீனாவில் நடந்து வரும் பாண்டா கரடிகளின் இனப்பெருக்கம் திட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மண்டலத்தின் விரிவாக்க திட்டமான இயற்கை பாதுகாப்பு மண்டலம் ஆகியவற்றை ஷிச்சின்பிங் எனக்கு அறிமுகப்படுத்தினார். இதைக் கேட்ட ரோக்ஸி கூறுகையில், சீனாவின் பாண்டா கரடியை கட்டித் தழுவ விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
ஷிச்சின்பிங்கின் தலைமையில் சீனாவின் வனவிலங்குகளின் பாதுகாப்புப் பணி முக்கிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது என்றும் ரோக்ஸி குறிப்பிட்டார்.