காசா பகுதியில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை முன்னேற்றம்:எகிப்து
2024-04-08 10:05:48

போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல், கத்தார், அமெரிக்கா ஆகிய தரப்புகளின் பிரதிநிதிகள், கெய்ரோவை விட்டு, 2 நாட்களுக்குள் திரும்ப உள்ளனர். போர் நிறுத்தத்திற்கான இறுதி திட்டத்தின் விரிவான விதிகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்தவுள்ளனர் என்று எகிப்து பாதுகாப்பு துறையின் உயர் நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக எகிப்து தொலைகாட்சி நிலையம் உள்ளூர் நேரப்படி 8ஆம் நாள் விடியற்காலையில் செய்தி வெளியிட்டது.

நடப்பு சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, தொடர்புடைய தரப்புகள் சர்ச்சைக்குரிய அம்சங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பல்வேறு தரப்புகளுக்கிடையில் ஒத்த கருத்துக்களை வலுப்படுத்துவதிலும் பெரிய முன்னேற்றம் படைக்கப்பட்டுள்ளது என்று இந்த அதிகாரி தெரிவித்தார்.