யெல்லனின் சீனப் பயணத்திற்கு பிறகு... அமெரிக்கா தனது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டு
2024-04-09 10:54:53

அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் 9ஆம் நாள் தனது சீனப் பயணத்தை முடித்துக்கொள்ள உள்ளார். இவ்வாண்டில் முதல்முறையாக அமெரிக்க அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் சீனாவிற்கு வருகை தந்துள்ளார்.  9 திங்கள் காலத்திற்குப் பிறகு, யெல்லன் மீண்டும் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவாகும்.

இப்பயணத்தின் போது, இரு தரப்புகள் பல்வேறு நிலை மற்றும்  பல்வேறு துறைச் சார்ந்த பேச்சுவார்த்தைகளையும் பரிமாற்றங்களையும் நடத்தியுள்ளன. சீன மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கிடையிலான முக்கிய ஒத்த கருத்துக்களை கூட்டாகச் செயல்படுத்த இரு தரப்புகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, நிதி ஒத்துழைப்பு முதலியவை குறித்து புதிய ஒத்த கருத்துக்களும் இதில் எட்டப்பட்டுள்ளன.

அமெரிக்காவும் சீனாவும் பொறுப்புணர்வுடன் இருதரப்புப் பொருளாதார உறவை நிர்வாகிக்க வேண்டும். சீனாவுடன் பொருளாதார உறவைத் துண்டிப்பதை நாடுவதில்லை என்று யெல்லன் அம்மையார் மீண்டும் தெரிவுபடுத்தினார்.

யெல்லனின் கூற்றுகளை எப்படி செயல்படுத்துவது என்று  மக்களின் மனதில் உறுதி இல்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, தனது பொறுப்புகளை ஏற்குமா இல்லையா என்பது சில வரையறைகளின் மூலம் கணிக்கப்படலாம். முதலில், பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகளை அரசியலாக்குவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். இந்த அடிப்படையில், சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் சந்தை ரீதியான விதிமுறைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.