பாதுகாப்புத் துறையில் ஜப்பானின் ஆபத்தான செயல்பாடுகள் அதிகரிப்பு
2024-04-14 21:19:06

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தை பெரியளவில் புதுப்பித்தல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸுடன் தென் சீனக் கடலில் இராணுவ பயிற்சி நடத்துதல், ஆகுஸ் திட்டத்தில் சேர முயற்சித்தல் உள்ளிட்டவற்றில் ஜப்பான் அண்மையில் ஈடுபட்டு வந்தது. இது குறித்து, ஜப்பானில் உள்ள சில நிபுணர்கள் கூறுகையில், ஜப்பானிய அரசு இராணுவக் கூட்டாளியுறவை வாய்ப்பாக கொண்டு, தனது இராணுவ ஆற்றலை அதிகரிக்க முயற்சித்து வருவதாகவும், ஜப்பான் போரை நோக்கி செல்லும் ஆபத்தான பாதையில் நடப்பதால், பிராந்திய நாடுகள் உயர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

கடந்த ஆண்டில், ஜப்பானிய அரசு ஜப்பானிய தற்காப்பு படைக்கு புதிய செயல்பாடுகளை வழங்கியது. தற்காப்பு என்பதிலிருந்து தாக்குதல் திறன் கொண்டதாக மாறியுள்ளது.

ஜப்பான் அமைதிக்கான அரசியல் அமைப்புச்சட்டத்திலிருந்து மேலும் விலகி, பல துறைகளில் அமெரிக்காவின் உலகளாவிய நெடுநோக்கு திட்டத்துக்காக ஒத்துழைப்பு மேற்கொண்டு, சிறியளவு குழுவை உருவாக்க முயற்சித்து வருகின்றது. இந்தச் செயல்பாடுகள் மூலம், சீனாவுக்கு எதிரான அதன் நோக்கம் மேலும் தெளிவாகத் தெரிகின்றது.

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே இராணுவக் கூட்டணியை மேலும் மேம்படுத்தினால், இப்பிராந்தியத்தின் சமநிலை சீர்குலைந்து, இதர நாடுகளுக்கிடையே கவலை மற்றும் மனநிறைவின்மையை ஏற்படுத்தும். இது, பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத் தன்மைக்கு ஆபத்து தரும்.