சீன நிதி நிலைத்தன்மைப் பணிக்கூட்டம்
2024-04-15 20:24:33

சீன மக்கள் வங்கி அண்மையில் நடத்திய 2024 ஆம் ஆண்டுக்கான நிதி நிலைத்தன்மை பணிக்கூட்டத்தில், 2023 ஆம் ஆண்டில் நிதி நிலைத்தன்மைப் பணியின் அனுபவங்களை ஆராய்ந்ததோடு, தற்போதைய நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து, அடுத்த கட்ட பணிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

தற்போது, சீனாவின் நிதி அமைப்புமுறை நிதானமாகவும் சீராகவும் உள்ளது. பொதுவாக நிதி இடர்பாடுகள் அளவு  குறைந்து வருகின்றது. கடந்த ஆண்டில் வங்கி, காப்பீடு, பங்கு பத்திரம் முதலியவற்றின் முக்கிய மேலாண்மை மற்றும் கண்காணிப்பு குறிப்புகள் என அனைத்தும் நியாயமான நிலையில் இருந்தன என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.