இந்தோனேசியா, கம்போடியா மற்றும் பப்புவா நியு கினியாவில் வாங்யீ பயணம்
2024-04-16 19:42:39

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அழைப்பின் பேரில், ஏப்ரல் 18 முதல் 23ஆம் நாள் வரை, இந்தோனேசியா, கம்போடியா, பப்புவா நியு கினியா ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன-இந்தோனேசிய உயர்நிலை பேச்சுவார்த்தை ஒத்துழைப்பு அமைப்பு முறையின் 4ஆவது கூட்டத்துக்கும், சீன-கம்போடிய அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழுமத்தின் 7ஆவது கூட்டத்துக்கும் அவர் தலைமைதாங்கவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் சியென் 16ஆம் நாள் தெரிவித்தார்.