மத்திய அமெரிக்க நாடுகளில் காட்டுத் தீ விபத்து
2024-04-16 09:46:05

கொலம்பியாவின் செய்தி ஊடகம் 15ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி 2024ஆம் ஆண்டு முதல், பல மத்திய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயால், ஏறக்குறைய 10 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் அழிந்து வருகின்றன. அவற்றில் நிகரகுவா, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடுமையான தீ பரவும் நிலைமையை எதிர்கொண்டுள்ள குவாத்தமாலா நாடு 30 நாட்கள் நீடிக்கும் அவசர நிலையில் நுழைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த தீ விபத்து பெரும் சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களின் உற்பத்தி, வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் பல்வகை உயிரினங்கள் ஆகியவற்றை அச்சுறுத்தியுள்ளது.

வன வளங்களுக்கு மேலும் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், மிகவும் பயனுள்ள தீ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வன மேலாண்மை கொள்கைகளை வெளியிட தொடர்புடைய பிரமுகர்கள் தொடர்புடைய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.