நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல் பற்றிய சர்வதேச கருத்தரங்கு
2024-04-16 10:23:41

நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றல் பற்றிய சர்வதேச கருத்தரங்குக் கூட்டம், ஏப்ரல் 15ஆம் நாள் பிரான்சின் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்றது. நாகரிகங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றலும், மனிதகுலத்தின் பொதுவான எதிர்பார்ப்பும் என்ற கருப்பொருளைக் கொண்டு, உலக நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கூடி, ஆழமாக விவாதித்துள்ளனர். இந்த கருத்தரங்கு, சீன அரசவையின் செய்தி அலுவலகம், யுனெஸ்கோ, யுனெஸ்கோவுக்கான சீன தேசிய ஆணையம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது.

யுனெஸ்கோ அதிகாரிகள், அதன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.