சீன-சௌதி அரேபியா வெளியுறவு அமைச்சர்களின் தொலைபேசி தொடர்பு
2024-04-16 10:16:20

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 15ஆம் நாள், சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசலுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

வாங்யீ கூறுகையில்,

சிரியாவுக்கான ஈரானின் தூதரகம் மீதான தாக்குதல் போன்ற சர்வதேச சட்டத்திற்கு கடுமையாக புறம்பான செயலை சீனத் தரப்பு உறுதியாக எதிர்த்து வருகிறது. தூதாண்மை வழிமுறையின் மூலம் பிரச்சினையை தீர்க்கும் சௌதி அரேபியாவுக்கு சீனத் தரப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவுடன் சேர்ந்து பாடுபட்டு, பகைமை மேலும் தீவிரமாகாமல் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

ஐ.நா பாதுகாப்பவையின் 2728ஆவது தீர்மானத்தைக் கண்டிப்பாக செயல்படுத்துவது என்பது தற்போதைய முக்கிய கடமையாகும். நிபந்தனையின்றி நீண்டகாலம் போர் நிறுத்தி, அப்பாவி மக்களைப் பாதுகாத்து, மனித நேய உதவி அளிக்க வேண்டும் என்றும் வாங்யீ வலியுறுத்தினார்.

சீனா ஆற்றியுள்ள ஆக்கப்பூர்வமான முக்கியமான பங்குகள் மீது சௌதி அரேபியா வெகுவாக எதிர்பார்ப்பை வைத்துள்ளது. காசா பகுதியில் நிபந்தனையின்றி போர் நிறுத்த விரைவுபடுத்த வேண்டும். இரு நாடுகளின் தீர்வு திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று ஃபைசல் தெரிவித்தார்.