15ஆவது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம் டாலியனில் நடைபெறவுள்ளது
2024-04-16 20:21:07

உலகப் பொருளாதார மன்றத்தின் புதிய சாம்பியன்களின் 15ஆவது ஆண்டுக் கூட்டம் என அழைக்கப்படும் கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம்,  ஜூன் 25 முதல் 27ஆம் நாள் வரை சீனாவின் லியாவ்நிங் மாநிலத்தின் டாலியனில் நடைபெற உள்ளது.

எதிர்கால வளர்ச்சிக்கான புதிய முன்னோடி என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், அரசியல், வணிகம், சமூக நிறுவனம், சர்வதேச நிறுவனம், ஊடகம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த சுமார் 1500 பிரதிநிதிகள் பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகளாவிய புதிய பொருளாதாரம், சீனாவும் உலகமும், ஏ.ஐ.கால தொழில் முனைவோர்களின் மனப்பான்மை, தொழில்துறையின் புதிய அதிநவீன தொழில் நுட்பம், காலநிலை, இயற்கை மற்றும் எரியாற்றல் என மூன்றுக்கும் இடையேயான தொடர்பு முதலிய 6 கருப்பொருட்கள் குறித்து அவர்கள் பரிமாற்றம் மேற்கொள்வர்.