ஹாங்காங் பிரச்சினைக்கான பிரிட்டனின் அறிக்கைக்கு சீனா எதிர்ப்பு
2024-04-16 20:07:57

பிரிட்டன் அரசு வெளியிட்ட கூறப்படும் ஹாங்காங் பிரச்சினை பற்றிய அரை ஆண்டறிக்கை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்சியென் செய்தியாளர் கூட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, இந்த அறிக்கை உண்மையைப் பொருட்படுத்தாமல், ஹாங்காங் விவகாரத்திலும் சீனாவின் உள்நாட்டு அரசியலிலும் கொடூரகாக தலையிட்டுள்ளதுடன், சர்வதேச சட்ட கோட்பாட்டையும் சர்வதேச உறவின் அடிப்படை விதிகளையும் கடுமையாக அத்துமீறியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். இந்தச் செயலுக்கு சீனா வன்மையான கண்டனத்தையும் உறுதியான எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது என்று கூறினார்.