சீனப் பொருளாதார வளர்ச்சி நல்ல தொடக்கத்தை எட்டியது
2024-04-17 19:45:11

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனத் தேசிய பொருளாதாரச் செயல்பாடு குறித்த முக்கிய தரவுகள் வெளியாகின. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் கேள்விக்குப் பதிலளிக்கையில், சீனப் பொருளாதாரத்தின் பல்வேறு குறியீடுகள் தொடர்ந்து மீட்சி அடைந்து, நிதானமாக அதிகரித்து வருவதுடன், நல்ல துவக்கத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சர்வதேச சமூகத்தில் சீனா மீது நம்பிக்கை கொண்டிருக்கும் குரல்கள் அதிகரித்து வருகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் இவ்வாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஆசிய வளர்ச்சி எதிர்பார்ப்பு பற்றிய ஆய்வு அறிக்கையில், 2024முதல் 2025ஆம் ஆண்டு வரை, ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் பங்கு விகிதம் 46விழுக்காடாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.

தவிர, பொருளாதாரத் துறையில் தரமான மற்றும் நியாயமான அதிகரிப்பு அடைய நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். பல்வேறு நாடுகளுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம் என்றும் லின் ஜியன் தெரிவித்தார்.