சீன-ஜெர்மனி நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்த வேண்டும்
2024-04-17 20:06:09

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியென் 17ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில், ஜெர்மன் தலைமையமைச்சர் ஷோல்ஸ் அண்மையில் மேற்கொண்ட 3 நாள் சீனப்பயணம் பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஷோல்ஸ் அழைப்பின் பேரில் ஏப்ரல் 14 முதல் 16ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டார். சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், அவருடன் சந்திப்பு நடத்தினார். சீன-ஜெர்மனி உறவு பற்றி இருநாட்டு தலைவர்கள் நேர்மையாகவும் ஆழமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். நெடுநோக்கு தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்தி, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன-ஐரோப்பிய உறவின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமெனவும், கூட்டாக உலகளவிலான அறைக்கூவல்களைச் சமாளித்து, உலகிற்கு மேலதிகமான நிதானத்தையும் உறுதியையும் வழங்க வேண்டுமெனவும் ஒத்தக்கருத்துக்கு வந்தனர்.