முன்மதிப்பீட்டின்படி சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம்
2024-04-17 10:11:00

அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தை அதிகரித்து, புதிய ரக உற்பத்தி ஆற்றலை சீனா தொடர்ந்து வளர்ப்பதோடு, இவ்வாண்டில், சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகம் முன்மதிப்பீட்டின்படியே எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மீது நாங்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளோம் என்று 15ஆம் நாள், சீனாவின் ஹைனான் மாநிலத்தில் 4ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சியில் கலந்துகொண்ட சீனாவுக்கான அயர்லாந்து தூதரகத்தின் வர்த்தக கவுன்சிலர் ஜோசப் கீட்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகளவில் 71 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து சுமார் 4000க்கும் மேலான தொழில் சின்னங்கள் இப்பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சீனப் பொருளாதாரத்தின் சீரான மீட்சியை இப்பொருட்காட்சி வெளிகாட்டியுள்ளது.

ஏப்ரல் 16ஆம் நாள் வெளியிடப்பட்ட சீனாவின் அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரங்களின்படி, மாறாத விலை என்ற அடிப்படையில் கணித்தலின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகமாகும். இவ்விகிதம், முன்மதிப்பீட்டைத் தாண்டியுள்ளது.

ஜெர்மன் தலைமையமைச்சரின் சீனப் பயணத்தின் மூலம், சீனப் பொருளாதாரத்தின் உண்மையான நிலைமை குறித்து ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிந்துகொள்ள விரும்புகின்றன. சீனாவின் முதலாவது காலாண்டின் பொருளாதார தரவுகள் அவர்களுக்குப் பதிலளித்துள்ளன.

நுகர்வு என்பது சீனப் பொருளாதாரத்திற்கு முக்கியம். சந்தை உள்ளார்ந்த ஆற்றல் அதிகம். புதிய ரக உற்பத்தி ஆற்றல், புதிய வளர்ச்சி உந்து ஆற்றலைக் கொண்டு வரும். பொருளாதாரத்தின் முன்மதிப்பீடு மற்றும் வளர்ச்சி திசையும் மிகவும் முக்கியம். இது, சீனப் பொருளாதாரத்தின் மேம்பாடாகும். இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனப் பொருளாதாரத்தின் மீட்சி ஒருமித்த கருத்தாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.