பாலஸ்தீனத்துக்கான சீனாவின் புதிய உதவிப் பொருட்கள் எகிப்துக்கு சென்றடையவுள்ளது
2024-04-17 20:09:05

எகிப்தில் உள்ள சீனத் தூதரகம் 16ஆம் நாள் இரவு வெளியிட்ட செய்தியின்படி, கூடாரங்கள், போர்வைகள், பருத்தி ஆடைகள், மருத்துவ சிகிச்சைப் பொருட்கள் மற்றும் மாவு உள்ளிட்ட பாலஸ்தீனத்திற்கான சீனாவின் புதிய உதவிப் பொருட்கள் 18ஆம் நாளில் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்தை 18ஆம் தேதியும், போர்ட் சைட் துறைமுகத்தை 19ஆம் தேதியும் வந்தடையும். தொடர்ந்து, இவை ரஃபா நுழைவாயில் வழியமாக காசா பகுதிக்கு அனுப்பப்படும்.

காசாவின் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்கும் விதம், சீன அரசு தொடர்ந்து இயன்ற அளவில் பாலஸ்தீனத்துக்கு உதவி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.