2024 உலக பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு உயர்வு
2024-04-17 14:28:48

சர்வதேச நாணய நிதியம், உலக பொருளாதார வளர்ச்சிக்கான புதிய முன்னாய்வு அறிக்கையை 16ம் நாள் வெளியிட்டது. 2024ம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடு, 3.2 விழுக்காடாக உயர்ந்து, ஜனவரி திங்களில் இருந்ததை விட 0.1 விழுக்காடு அதிகரித்தது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டில் வளர்ந்த பொருளாதாரச் சந்தைகளின் வளர்ச்சி மதிப்பீடு 1.7 விழுக்காடு ஆகும். புதிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளின் வளர்ச்சி மதிப்பீடு 4.2 விழுக்காடு ஆகும். தவிரவும், உலகின் மொத்த பணவீக்க விகிதம் பற்றிய மதிப்பீடு, கடந்த ஆண்டில் இருந்த 6.8 விழுக்காட்டிலிருந்து, இவ்வாண்டு 5.9 விழுக்காடாகக் குறையக் கூடும். 2025ம் ஆண்டில் இவ்விகிதம் தொடர்ந்து 4.5 விழுக்காடாகக் குறைய வாய்ப்பு உண்டு என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.