சீன-அமெரிக்க நிதி பணிக்குழுவின் நான்காவது கூட்டம்
2024-04-17 14:37:04

ஏப்ரல் 16ஆம் நாள், சீன-அமெரிக்க நிதி பணிக்குழுவின் நான்காவது கூட்டம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. சீன மக்கள் வங்கியின் துணை தலைவர் சுவான் சாங்னெங், அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் பிரென்ட் நெய்மன் ஆகியோர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர். அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஜேனட் யெலன் சீன பிரதிநிதி குழுவைச் சந்தித்தார்.

இருநாட்டு நாணய கொள்கைகள் மற்றும் நிதி நிதானம், நிதி ஒழுங்குமுறை ஒத்துழைப்பு, நிதிச் சந்தையின் அமைப்பு ஏற்பாடுகள், எல்லை கடந்த பணம் செலுத்துதல் மற்றும் தரவு, தொடரவல்ல நிதி, பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டல் எதிர்ப்பு, நிதி உள்கட்டமைப்பு மற்றும் பிற பரஸ்பர அக்கறை கொண்ட நிதிக் கொள்கைகள் குறித்து, இருதரப்புகளும் பரிமாறிக் கொண்டுள்ளன. இக்கூட்டத்தில் இரு நாடுகளின் நிதி ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து, இருதரப்பின் தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் அறிக்கைகளை அளித்தன. இருதரப்பினரும் தொடர்ந்து தொடர்பு கொள்ள ஒப்புக்கொண்டனர்.