மத்திய கிழக்கில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமைக்கு இஸ்ரேல் முழு பொறுப்பு
2024-04-17 09:31:03

மத்திய கிழக்கில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமைக்கு இஸ்ரேல் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று துருக்கி அரசுத் தலைவர் ரெசெப் தயிப் எர்டோகன் 16ஆம் நாள் தெரிவித்தார்.

கடந்த ஆண்டின் அக்டோபர் முதல், பிராந்திய மோதலைத் தூண்டுவதற்கு இஸ்ரேல் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தனது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை, புதிய பிராந்திய மோதல் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் மீதான ஈரான் நடத்திய தாக்குதலை மட்டுமே கண்டிக்கின்றன. ஆனால், ஈரானின் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியது, சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறியது ஆகியவற்றை மேற்கத்திய நாடுகள் கண்டிக்கவில்லை என்றார்.