காணொலி வழியாக சீன-அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர்கள் உரையாடல்
2024-04-17 11:46:59

ஏப்ரல் 16ஆம் நாளிரவு சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் காணொலி வழியாக தொடர்புக் கொண்டு பேசினார்.

டோங் ஜுன் கூறுகையில், தைவான் பிரச்சினை, சீனாவின் முக்கிய நலன் பிரச்சினைகளில் மைய அம்சம். சீனாவின் முக்கிய நலன் சீர்குலைக்கப்படுவதை அனுமதிக்காது. மேலும், தற்போது தென் சீனக் கடல் பகுதி பொதுவாக நிதானமானதாக உள்ளது. பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அந்தந்த பிராந்திய நாடுகளுக்கு விருப்பம் மற்றும் திறன் உள்ளன. சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை அமெரிக்கா புரிந்து கொள்வதோடு, தென் சீனக் கடலில் சீனாவின் இறையாண்மை கடல்சார் உரிமை நலன்களைப் பயனுள்ள முறையில் மதிக்க வேண்டும். உண்மையான நடவடிக்கைகளின் மூலம் பிரதேசங்களின் அமைதியையும் இரு நாட்டுறவு மற்றும் ராணுவ உறவின் நிலைப்புத்தன்மையையும் பேணிகாக்க வேண்டும் என்றார்.

பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.