ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா நடுத்தர தூர ஏவுகணை நிலைநிறுத்த சீனா கடும் எதிர்ப்பு
2024-04-18 18:55:27

பிலிப்பைன்ஸுடனான கூட்டு இராணவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா பிலிப்பைன்ஸுக்குச் சொந்தமான லூசன் தீவில் நடுத்தரத் தூர ஏவுகணை செலுத்தும் அமைப்பை நிலைநிறுத்தியுள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் 18ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், இது குறித்து சீனத் தரப்பு தீவிர கவலை தெரிவித்துள்ளது. ஒரு சார்பு இராணுவ ஆதாயத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நடுத்தர தூர ஏவுகணைகளை நிலைநிறுத்துவதை சீனா எப்போதும் உறுதியுடன் எதிர்க்கின்றது. சீனாவின் வீட்டுக் கதவு முன்னால் இராணுவப் பரவலை வலுப்படுத்துவது போன்ற அமெரிக்காவின் இச்செயல், பிராந்தியத்தின் பதற்ற நிலையைத் தீவிரமாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

ஆத்திரமூட்டக் கூடியஇராணுவ செயல்பாட்டை நிறுத்தவும், பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனத் தரப்பு அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.