ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை
2024-04-18 11:14:59

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய வானிலை மையம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அந்நாட்டில் 1949ஆம் ஆண்டு பதிவாகியதிலிருந்து வரலாறு காணாத கனமழை பெய்தது. 

இந்த மையத்தின் தரவுகளின்படி, அல் அயின் பகுதியில் 24 மணி நேரத்திற்குள் 254.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த கனமழையால் ஒருவர் உயிரிழந்தார் என்றும், மோசமான வானிலையால் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டு, விமானம் நிறுத்தும் தளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.