சர்வதேச சட்டத்தைப் பின்பற்றுவதில் அமெரிக்காவுக்கு தனிச்சலுகை கிடையாது
2024-04-18 20:03:19

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜகர்தாவில் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரைடேனொவுடன்  18ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். காசா பிரச்சினையில் சீனாவில் நிலைப்பாடு பற்றி செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், காசா மோதல் அரை ஆண்டாக நீடித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பவை சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளின் படி காசா மோதல் நிறுத்தம் பற்றிய தீராமானங்களைத் தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. ஆனால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்து வருகிறது என்று வாங்யீ தெரிவித்தார். சர்வதேச சட்டத்தைப் பின்பற்றுவதில் ஐ.நாவுக்கும், அமெரிக்காவுக்கும் தனிச்சலுகை ஏதுமில்லை. அமெரிக்கா தனது சர்வதேச பொறுப்பை ஏற்று, 2728ஆவது தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து, காசாவில் வெகுவிரைவில் முழுமையாக போர் நிறுத்தத்தை நனவாக்க வேண்டும் என்றும் வாங்யீ வேண்டுகோள் விடுத்தார்.