வெளிநாட்டு கொள்முதலாளர்களுடன் லீச்சியாங் கலந்துரையாடல்
2024-04-18 10:44:27

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஏப்ரல் 17ஆம் நாள் குவாங்சோ மாநகரில் 135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு கொள்முதலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் கூறுகையில், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனச் சந்தையை ஆய்வு செய்து சீனாவிலுள்ள வணிகத்தை விரிவாக்க வேண்டும் என்றும், சீனாவின் மாபெரும் சந்தைத் தேவை, திறப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை மேலும் நன்கு பகிர்ந்து கொண்டு சீன-வெளிநாட்டு பரஸ்பர புரிந்துணர்வையும் ஒன்றுக்கொன்று நன்மை தரும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கு நட்புத் தூதராக பங்காற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

சந்தை நுழைவுகளைச் சீனா தொடர்ந்து விரிவாக்கி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டுக்கான சேவை உத்தரவாதத்தையும் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பையும் வலுப்படுத்தி சீனாவிலுள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயனுள்ள முறையில் பேணிக்காக்கும் என்று லீச்சியாங் கூறினார்.

சீனச் சர்வதேச இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சியின் வரலாறு, பன்னாட்டு நிறுவனங்கள் சீன வாய்ப்புகளைக் கூட்டாகப் பகிர்ந்து கொண்டு கூட்டு வெற்றியை நனவாக்கும் வரலாறும் ஆகும். சீனா திறப்பைத் தொடர்ந்து விரிவாக்கி சர்வதேச சந்தையில் ஆக்கப்பூர்வமாக இணைந்துள்ளதையும் இது பிரதிபலித்துள்ளதாக லீச்சியாங் தெரிவித்தார்.