அமெரிக்க நிதிக்கொள்கைக்கு சர்வதேச நாணய நிதியம் விமர்சனம்
2024-04-18 10:17:53

சர்வதேச நாணய நிதியம் உலக பொருளாதார வளர்ச்சிக்கான முன்னாய்வு பற்றிய புதிய அறிக்கையை 16ம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையில், சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை நேரடியாக விமர்சித்தது. தற்போதைய அமெரிக்க நிதிக்கொள்கை தொடர்ச்சியாக இருக்க முடியாமல், உலக நிதியின் நிலைப்புத் தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அரசின் அளவுக்கு மீறிய செலவு, வரவுச் செலவு திட்டத்தில் மாபெரும் பற்றாக்குறையை விளைவித்துள்ளது. குறுகிய காலத்தில் இது, பணவீக்கக் குறைப்புக்கு உதவாது. நீண்டகாலத்தில் உலகளவில் நிதி திரட்டும் செலவுகளை உயர்த்தி, உலகின் நிதி மற்றும் நாணய நிலைப்புத் தன்மையைச் சீர்குலைக்கும் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.