முதல் காலாண்டில் எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை 117.8விழுக்காடு அதிகரிப்பு:சீனா
2024-04-18 11:32:16

சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 18ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை 14 கோடியே 10 இலட்சமாகும். இது, கடந்த ஆண்டை விட 117.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3 மடங்கு அதிகரித்தது. சீனாவிற்கு வந்துள்ள அதிகப் பயணிகள் சேர்ந்த நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் இதில் அடக்கம். தவிரவும், ரஷியா, வியட்நாம், மியன்மார், மங்கோலியா, லாவோஸ் முதலிய சீனாவின் அண்டை நாடுகளும் இதில் காணப்பட்டன. தென் கொரியா, ஜப்பான், மலேசியா, சிங்கபூர், தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசியா  மற்றும் தென்கிழக்காசியாவின் நாடுகளும் இதில் இடம்பெற்றன. சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களில் மக்களில் சுமார் 30 விழுக்காட்டினர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.