ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இயற்கை சீற்றத்தால் உயிரிழப்பு
2024-04-18 09:52:16

ஏப்ரல் 17ஆம் நாள் ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசின் இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்தியின் படி, கடந்த 6 நாட்களில் அந்நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 70 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்தனர். 2500க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. 2000க்கும் மேற்பட்ட கால்நடைகள் மாண்டு போயியுள்ளன.

இதற்கிடையில் பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 17ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல் 13ஆம் நாள் முதல், பாகிஸ்தானில் தொடர்ச்சியான பலத்த மழையால் ஏற்பட்ட பல்வேறு பேரழிவுகளில் குறைந்தது 71 பேர் உயிரிழந்தனர், 67 பேர் காயமடைந்தனர் என்று கூறப்பட்டது.

தற்போது, பாகிஸ்தான் இராணுவம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.