சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்து ஆற்றலாக புத்தாக்கம் :ஐ.எம்.எஃப்
2024-04-18 10:58:26

சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்து ஆற்றலாக புத்தாக்கம் திகழ்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகார அலுவலகத்தின் தலைவர் விட்டர் காஸ்பர் 17ஆம் நாள் சி.எம்.ஜிக்கு பேட்டியளித்த போது தெரிவித்தார்.

சீனாவைப் பொறுத்தவரை, புத்தாக்கம் மற்றும் புதிய தரமான  உற்பத்திச் சக்திகள் , முன்னுரிமையுடன் கூடிய முக்கிய பணிகளாகும். எடுத்துதக்காடாக, பசுமை ஆற்றல் துறையில் சீனா சில முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது, உலக நாடுகள், புத்தாக்கம், குறைந்த கார்பன் மற்றும் பசுமை மாற்றம் ஆகிய துறைகளில் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, உலகளாவிய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இந்த துறைகளில் சீனா ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்று காஸ்பர் விருப்பம் தெரிவித்தார்.