இந்தியாவின் பொதுத் தேர்தல் தொடங்கியது
2024-04-19 11:17:33

உள்ளூர் நேரப்படி 19ஆம் நாள் 7 மணிக்கு, 2024ஆம் ஆண்டு இந்திய பொதுத்தேர்தல் துவங்கியுள்ளது. இப்பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று, ஜூன் திங்கள் 4ஆம் நாள் வரை நீடிக்கும்.

இந்திய நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை  ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மக்களவையில் 545 இல் 543 இடங்கள் தேர்தலின் மூலம் தேர்தெடுக்கப்படும். இப்பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளை பெறும் கட்சி அல்லது கூட்டணிக் கட்சி அமைச்சரவையை அமைக்கும்.