ஒத்துழைப்பை மேம்படுத்தும் பாலமாகச் செயல்பட கொள்முதலாளர்களுக்கு சீன தலைமை அமைச்சர் ஊக்கம்
2024-04-19 14:19:22

ஏப்ரல் 18ஆம் நாள் 135ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்காட்சியின் நிறுவன அரங்கத்தினைச் சீன தலைமையமைச்சர் லீ ச்சியாங் பார்வையிட்டார். அப்போது, சீர்திருத்தம் மற்றும் திறப்பை ஆழமாக்கவும், புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியைக் கடைப்பிடிக்கவும், இப்பொருட்காட்சியை புதிய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கொள்முதலாளர்களுடன் பரிமாற்றம் மேற்கொண்ட அவர், கொள்முதலாளர்களிடம் சீனாவுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் பாலமாக மாறுவதற்காகவும், சீனாவுக்கும் உலகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.