14ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா துவக்கம்
2024-04-19 10:00:38

14ஆவது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா ஏப்ரல் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இத்திரைப்பட விழா சீன ஊடகக் குழுமம் மற்றும் பெய்ஜிங் மாநகராட்சி அரசால் நடத்தப்படுவது ஆகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவரும், இத்திரைப்பட விழாவின் அமைப்புக் குழுத் தலைவருமான ஷென் ஹாய்சிவுங் அன்று நடைபெற்ற துவக்க விழாவில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், திரைப்படங்களின் மூலம், புதிய யுகத்தில் சீனாவின் கதைகளை நன்கு கூறி நாகரிகங்களுக்கிடையே பரிமாற்றத்தை முன்னேற்றி, மனிதகுலப் பொதுச் சமூகத்தின் கட்டுமானத்துக்கு ஆழ்ந்த பண்பாட்டுச் சக்தியைக் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்தார். 

9 நாட்கள் நீடிக்கும் நடப்புத் திரைப்பட விழாவில் பன்னாடுகளைச் சேர்ந்த 4ஆயிரத்து 273 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.