ஈரான் மீது தடை நவடிக்கையை மேற்கொள்வதாகப் பிரிட்டனும் அமெரிக்காவும் அறிவிப்பு
2024-04-19 15:21:36

இஸ்ரேல் மீது ஈரான் அண்மையில் பழிவாங்கும் தாக்குதலை நடத்தியற்குப் பதிலளிக்கும் வகையில், ஈரானைச் சேர்ந்த பல நபர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் மீது தடை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகப் பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகள் 18ஆம் நாள் முறையே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஈரானின் ஆளில்லா விமானத் திட்டப்பணியுடன் தொடர்புடைய 16 நபர்கள், 5 இரும்புருக்குத் தொழில்நிறுவனங்கள், ஒரு வாகனத் தொழில்நிறுவனம் முதலியவற்றின் மீது தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதோடு புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமெரிக்க நிதித் துறை தெரிவித்துள்ளது.