5ஆவது காலகட்ட கதிரியக்க நீரை வெளியேற்ற துவங்கிய டோக்கியோ மின்னாற்றல் நிறுவம்
2024-04-19 15:35:42

உள்ளூர் நேரப்படி 19ஆம் நாள் முற்பகல், ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து கதிரியக்க நீரை வெளியேற்றம் 5ஆவது காலக்கட்ட திட்டத்தை டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் துவங்கியது. 2024ஆம் நிதி ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் 2025ஆம் ஆண்டின் மார்ச் வரையில், முதலாவது காலகட்டமாக இது விளங்குகிறது. இக்காலக்கட்டத்தில் மே திங்கள் 7ஆம் நாள் வரை  மொத்தம் அளவு 7800 டன் கதிரியக்க நீர் வெளியேற்றப்படும்.